தமிழ் மக்களின் இறைமை மதிக்கப்படாததால் 70 ஆண்டுகளாக நாங்கள் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கவில்லை – சம்பந்தன்


sampathan-759தமிழ் பேசும் மக்களின் இறைமை மதிக்கப்படாததால் தமிழரசுக்கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ கடந்த 70 வருடங்களாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

என்று தமிழ் மக்களின் இறைமை மதிக்கப்பட்டு அவர்கள் தம்மைத் தாமேஆளும் நிலை வருமோ, அன்றே அமைச்சுப் பதவியை ஏற்போம் எனவும் இரா.சம்பந்தன் மக்களுக்கு உறுதியளித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார்மாவட்டக் கிளையினால் சமகால அரசியல் கருத்தரங்கு  மன்னார்நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் உரையாற்றுகையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டுமென முதன் முதலாகக் கோரிய கட்சி. அக்கட்சி தொடர்ந்து 70 ஆண்டுகளாக அதே பாதையிலேயே பயணிக்கின்றது.

அத்துடன் நாம் எந்தவொருஅரசாங்கத்திடமிருந்தும் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

1965ஆம் ஆண்டு மாத்திரம் செனட் சபையின் உறுப்பினராக இருந்த திருச்செல்வம் மாத்திரமே உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சுப் பதவியை மாவட்ட சபை சட்டத்தை இயற்றுவதற்காக ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு