புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் தீயிட்டு எரிப்போம் – விமல் வீரவன்ச


wimal-weerawansa-1புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் தீயிட்டு எரிப்போம் என விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு சந்திரிக்கா அமையாரால் கொண்டுவரப்பட்ட தீர்வுத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தீயிட்டு கொழுத்தியது. அதேபோல் வெளிவரவிருக்கும் புதிய அரசியல் யாப்பை நாம் தீயிட்டுக் கொழுத்துவோம் எனவும் எச்சரித்துள்ளார்.

பாதுகைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு யாப்பின் மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ளப்போவதாக அரசாங்கம் கூறி வருகின்றது. இதன்மூலம்அதிகாரப் பகிர்வை வழங்கப்போவதாகவும், அது உச்ச அதிகாரப் பகிர்வாக இருக்குமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரம்செய்கின்றது.

இதன்மூலம் நிறைவேற்று அதிகார முறைமையை நீக்கி மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் மாகாணசபைகள் தன்னிச்சையாக இயங்கத் தொடங்கும். இதனால் மத்திய அரசாங்கத்தினால் மாகாணசபையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அவ்வாறான அதியுச்ச அதிகாரப் பகிர்வையே இந்த அரசாங்கம் வழங்கவுள்ளது.

அத்துடன் தான் 2000 ஆம் ஆண்டு முன்வைத்த திட்டமே தற்போது கொண்டுவரப்படவுள்ளதாக சந்திரிக்கா அம்மையார் கூறி வருகின்றார். சந்திரிக்கா கொண்டு வந்த திட்டத்தை ரணில் அரசு எரித்தது.

தற்போது அவர்கள் இரண்டுபேரும் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். நாட்டைப் பிரிக்கும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனைத் தீயிட்டுக் கொழுத்துவோம் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு