தமிழரசுக் கட்சியில் பிரதிநித்துவம் கேட்டு மாவையை சந்திக்கவில்லை – இணைப்பாளர் நடராஜ்


IMG-20170930-WA0003வடக்கு கிழக்கு மலையக  தமிழ் மக்கள் ஒன்றியத்தின்   சார்பில் நாங்கள்  தமிழரசுக் கட்சியின் தலைவா் மாவை சேனாதிராஜாவை    அவரது கட்சியில்  அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குமாறு கோரி  சந்திக்கவில்லை என வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின்  இணைப்பாளர் எம்பி. நடராஜ் தெரிவித்துள்ளாா்.
அவா் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள்   ஒன்றியத்தின் பிரதிநிதிகள்  வடக்கு கிழக்கில் வாழ்கின்ற  மலையக மக்களின் பிரச்சினைகள், சவால்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளையும் அரசியல் கட்சிகளின்  தலைவா்களை  சந்தித்து  எடுத்துக் கூறி வருகின்றனர்.
 அந்த வகையில் கடந்த காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர் மனோகணேசன், வடக்கு ஆளுநர் றெிஜனோல்ட் குரே, யாழ் இந்திய துணைத்தூதுவா் உள்ளிட்ட பலரை  சந்தித்து வடக்கு கிழக்கில்  வாழ்கின்ற மலையக மக்களின் பிரச்சினைகளை அவா்களது கவனத்திற்குகொண்டு சென்றுள்ளனா்.
அதனடிப்படையில் கடந்த வாரம்  இலங்கை தமிழரசு கட்சியிக் தலைவா் மாவை சேனாதிராஜாவையும் சந்தித்து கலந்துரையாடினோம், இக் கலந்துரையாடலில்  வடக்கு கிழக்கில் வாழ்கின்  மலையக மக்கள் அபிவிருத்தியில் ஏனைய விடயங்களிலும் புறக்கணிப்புக்குள்ளாக்கப்படுவது, பாரபட்சம் காட்டுப்படுவது, மற்றும் அரசியல் கட்சிகளால் போதிய பிரதிநிதித்துவம்  வழங்கப்படாத நிலைமைகள் என்பவற்றோடு,  மலையக சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் தமிழ்க்கவி எழுதிய கட்டுரை, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின்  தொலைபேசி உரையாடல் என்பவற்றையும், மாவை சேனாதிராஜாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுவே குறித்த சந்திப்பின் நோக்கம்  எனத்  தெரிவித்த நடராஜ்
குறித்த சந்திப்பு வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் தமிழரசுக் கட்சியில்  பிரதிநிதித்துவம்  கேட்டு அதில் இணைந்துகொள்ளவுள்ளதாக  இடம்பெற்றதாக முற்றிலும் உண்மைக்கு புறம்பாக செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாக மறுக்கிறேன் எனவும் குறிப்பிட்டாா்.
அத்தோடு எதிர்வரும் காலங்களில் நாம் ஈபிஆர்எல்எப், புளெட்,ரெலோ, ஈபிடிபி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தாா்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு