வட- கிழக்கு இணைப்பில்லை, சம்ஷ்டி ஆட்சியுமில்லை – மனோகணேசன்


thumb_large_mano_ganesanபுதிய அரசியலமைப்பில் வட-கிழக்கு இணைப்பு, சமஷ்டி தீர்வு வழங்குதல் போன்ற யோசனைகள் உள்வாங்கப்படாது என்றும் அவ்வாறு உள்வாங்கப்படமாட்டாது எனவும் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வட-கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாகவாழ்கின்றனர். இவர்கள் எல்லோரும் இணைந்தே நாட்டைக் கட்டியெழுப்பவோண்டும்.

சிங்கள மக்களின் மனங்களைவெற்றி கொண்டால்தான் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கமுடியும் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழர்களும் இந்த நாட்டு மக்கள், அவர்களுக்கும் இந்த நாட்டில் சமவுரிமை உண்டென்பதை சிங்களவர்களும் உணரவேண்டும். இவ்வாறான உணர்வைக் கட்டியெழுப்பும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படப்போகின்றது.

வட-கிழக்கு இணைப்பதில்லையெனவும், சமஷ்டி முறையிலான தீர்வையும்கொண்டுவருவதில்லையென்பதற்கு அனைவரும் இணங்கியுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாகபேசவுள்ளோம். அந்தப் பேச்சுக்களில் எட்டப்படும் இறுதித் தீர்மானங்களைக் கொண்டே அரசமைப்பு சட்டவரைபு உருவாக்கப்படும்.அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டபின் மக்களிடம் செல்வோம். பொது வாக்கெடுப்பு நடத்துவோம்.

மக்களே இறுதித் தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும்தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு