நாட்டு மக்களை இலங்கையர்களாக ஒருமிக்க முடியாமைக்கு ரணில் வருத்தம்


Ranil70 ஆண்டுகால நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் 60 ஆண்டுகால சுதந்திரத்தையும் அனுபவித்த இலங்கை மக்கள், இலங்கையர்களான ஒருமிக்க முடியாமை குறித்து வருந்துகிறார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்றுக் குறிப்பிட்டார்.

அனைத்து இன மக்களிடையேயும், கூட்டுணர்வை ஏற்படுத்தி, உண்மையான இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்துதற்கு, இலங்கை மக்களுக்கு முடியாமல் போயுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

“உண்மையான இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்த முடியாமை, 1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரத்தின் உச்சக்கட்ட நன்மைகளை அனுபவிக்க விடாமல் செய்தது” என்று தெரிவித்த அவர், இந்தத் தோல்வி, 6 தசாப்தங்கள் நீடித்த இன முரண்பாட்டுக்கும் 3 தசாப்தங்கள் நீடித்த போருக்கும் கொண்டு சென்றது எனவும் குறிப்பிட்டார்.

“தேசியப் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வொன்றுக்கு வருவதில் நாங்கள் வெற்றிபெறவில்லை என்பது, உண்மையிலேயே வருந்தத்தக்கது” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர்களான டி.எஸ். சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஜோன் கொத்தலாவல, தலைவர்களான ஜி.ஜி. பொன்னம்பலம், என்.எம். பெரேரா போன்றோர், நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டிக்காத்தனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு