ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி


98134446_mayakkamநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று புதன்கிழமை காலையில் வழங்கப்பட்ட உணவால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என காவல் துறை தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

உங்கள் கருத்து
 1. BC on October 4, 2017 3:17 pm

  //இன்று புதன்கிழமை காலையில் வழங்கப்பட்ட உணவால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என காவல் துறை தரப்பு சந்தேகம்.//
  200 வேலை செய்பவர்கள் பாதிப்படைந்தது கவலை
  இலங்கையில் ஆடைத்தொழிற்சாலையில் காலை உணவும் இலவசமாக வழங்குகிறார்களா? தேசம்நெற் இதுபற்றி தெரிவித்து இருக்கலாம்.சுப்பர் தான்.
  நான் இங்கே காசு கொடுத்து எல்லோ வேலைபார்க்கும் இடத்தின் உணவுசாலையில் சாப்பிடுகிறேன்.

  //காலையில் வழங்கப்பட்ட உணவால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என// அது என்ன உணவால் ஏற்பட்ட ஒவ்வாமை? அலர்ஜி தானே?
  அது எப்படி இப்போ வந்தது முன்பு ஏன் வரவில்லை?


 2. a Voter on October 7, 2017 11:53 am

  1. ஆடைத் தொழிற்சாலைகளில் காலை உணவு வழங்கப்படுகின்றது. ஏனனில் காலை 7 மணிக்கு அவர்களின் வேலை தொடங்குகிறது.
  2. உணவால் ஏற்பட்ட ஒவ்வாமை பழுதடைந்த உணவு மற்றும் உணவு நஞ்சாதல் ஆகியவற்றாலும் ஏற்படலாம்.


 3. BC on October 9, 2017 1:22 pm

  //உணவால் ஏற்பட்ட ஒவ்வாமை பழுதடைந்த உணவு மற்றும் உணவு நஞ்சாதல் ஆகியவற்றாலும் ஏற்படலாம்.//
  தகவலுக்கு நன்றி பழுதடைந்த உணவால் பலர் மயக்கம் அடைந்து விழுந்தனர் சிலர் மயக்ககம் அடையவில்லை ஆனால் பழுதடைந்த உணவு எல்லோருக்கும் தீமை ஆனது தானே
  பழுதடைந்த உணவால் அல்லது நஞ்சாக மாறிய உணவால் மக்கள் பாதிப்பு உள்ளானார்கள் என்று சொல்லாம் தானே எதற்கு அலர்ஜி ஒவ்வாமை நோயை இங்கே ஏன் கொண்டு வருகிறார்கள்? என்பதே நான் சொல்ல வந்தது.
  கொழும்பு பகுதிகளிளில் மனித சுகாதாரத்திற்கு தீமை செய்ய கூடிய உணவகங்கள் இருப்பதாக எச்சரிக்கபட்டுள்ளன யாழ்பாணம் இன்னும் மோசமாக இருக்கும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு