குண்டும், பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலம் இது


manoஇந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் என்று அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

புதிய தேர்தல் முறை சம்பந்தமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

யுத்தம் முடிந்து விட்டது எல்லாம் சரியாகிவிட்டது, எல்லாம் அமைதியாகிவிட்டது, பாலும் தேனும் ஓடுகின்றது என்று நானோ ரவூப் ஹக்கிமோ கூறப்போவதில்லை .

உண்மையில் கூறப்போனால் குண்டும், பீரங்கியும், இரத்தத்தையும், சதைகளையும் தொலைத்துக் கொண்டு நடந்த யுத்தத்தை விட இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் அபாயகரமானது என்று அவர் கூறியுள்ளார்.

இப்பாடியான ஒரு சூழலில், சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தும், அழ வேண்டிய இடத்தில் அழுதும், அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்தும் எதிர்நீச்சல் பேட்டு, சாணக்யமாக முன்நகர வேண்டும் என்பது தான் எமது பொறுப்பாக இருக்கின்றது.

தேர்தலில் முறையில் மாற்றம் தேவையில்லை. பழைய முறைதான் சிறந்தது. அதில் தான் சிறுபான்மை கட்சிகளுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைத்துக் கொண்டிருந்தது என்றும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு