தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – சுவாமிநாதன்


DM_Swaminathanதமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வி­னைப்­பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக் ­கப்­பட்­டு­ வ­ரு­வ­தாக இந்­து­ க­லா­சார திணைக் ­களம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்­புக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்­ச­ரிடம் அனு­ரா­த­பு­ரத்தில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போரா ட்ட விவ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போதே அவர் இதனை தெரிவித்தார்.

73 தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் மேல் நீதி­மன்றில் உள்­ளன. அவர்­க­ளுக்­கான சோத­னைப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. சட்­டமா அதிபர் குறித்த தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை விரை­வு­ப­டுத்­து­வ­தாக தெரிவித்­துள்ளார்.

விரை­வான வகையில் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றேன். என்னால் முடிந்­த­ வ­ரையில் அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டு­ வ­ரு­கின்றேன். சட்­டத்­தினை நாங்கள் மீறி நடக்­க­ மு­டி­யாது. ஆனால் அவற்­றினை சுல­ப­மாக விரை­வாக முடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளேன் என்றார்.

கேள்வி: இதன்­போது வடக்கில் உள்ள வழக்­கு­களை அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில்?

பதில்: அவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­த­தற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. அது தொடர்பில் ஆராய்ந்து அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுப்பேன்.அது எனது அமைச்­சிற்­கு­ரி­யது இல்லை.சட்­டமா அதி­பரின் கீழேயே உள்­ளது. அவ­ருடன் கலந்­து­ரை­யாடி அதற்கு ஒரு முடி­வினை எடுப்போம்.

கேள்வி: கேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சினை தொடர்பில் ?

பதில்: கேப்­பாப்பு­லவு மக்­களின் பிரச்­சி­னைகள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மீண்டும் அதனை தொடங்­க­வேண்டாம். 178 மில்­லியன் ரூபா பணம் ஒதுக்கீடுசெய்து அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் தான் அதனை எழுதிக்கொண்டுள்ளது. செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் அனைத் தும் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேல் என்னால் எதுவும் கூறமுடியாது என்றார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு