ஆர்ப்பாட்டப் பேரணி மீது காவல் துறையினர் நீர்த் தாரைப் பிரயோகம்


3அம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது

காவல் துறையினர் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் மீதே காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு