வடக்கு-கிழக்கில் சிறுபான்மை மக்களிடத்தில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்


628158801north-esat-Lவடக்கு கிழக்கில் சிறுபான்மை இன மக்களிடத்தில் காணப்படும் பிரச்சனைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக் கூடிய கடமைப்பாடு இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானா தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகப் பிரிவில் தனது 2017 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் சிறுபான்மை இன மக்களாக வாழும் எமக்குள்ளேயே ஒரு உடன்பாடில்லாத நிலைமை உள்ளது.

எமது மக்களிடத்தில் காணிப் பிரச்சனை, பல சங்கடமான பிரச்சினைகள் காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகனை ஒரு புரிந்துணர்வுடன் தீர்ப்பதற்கு இல்லாமல் எங்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வருகின்ற நேரத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போவது என்பது எவ்வாறு சாத்தியப்பட போகின்றது.

இவ்வாறான விடங்களில் பல சந்தேகங்கள் இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஏனைய தலைவர்களும் ஒன்றாக தேனீர் அருந்தி பேசினாலும், எங்கள்; மத்தியில் அடிமட்ட ரீதியாலான பல பிரச்சனைகள் புரையோடிப் போய் உள்ளது.

இவ்வாறான பிரச்சனைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக் கூடிய கடமைப்பாடு இருக்கின்றது.

எனவே ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சி செய்து வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு