விடுதலைப் புலிகளின் தியாகம் இடைக்கால அறிக்கை மூலம் குத்திக்குதறப்பட்டுள்ளது


RANILcxfgnhவிடுதலைப் புலகளின் தலைவர் பிரபாகரனினதும், மாவீரர்களினதும் தியாகம் இடைக்கால அறிக்கை மூலம் குத்திக்குதறப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரனை  பயன்படுத்தி சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி வருவதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுமந்திரன் ஐநா அதிகாரிகளைச் சந்தித்து இடைக்கால அறிக்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், புதிய அரசியலமைப்பு யாப்பின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனவும் விளக்கமளித்து வருகின்றதாகவும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை, சுமந்திரன் தேர்தல் பிரச்சாரத்தில் மறுப்பார் எனவும், இதற்கு இரா. சம்பந்தனும் உடன்படுவார் எனவும் செய்தி வெளியிட்டுள்ள அவ்வூடகம் இவ்வாறு இரட்டை முகம் கொண்ட அரசியல்வாதிகளை சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாணக்கியமாக பயன்படுத்தி வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சுமந்திரன் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கருவியினைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க இன்று சர்வதேச நாடுகளுக்கு இடைக்கால அறிக்கை மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விடுமென விளக்கமளித்து வருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு