160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை


sivajilingamசிறையிலுள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரிடம் கோருவதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இவர்கள் இருப்பதோடு, அதில் மூவர் தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களது நலம் குறித்து விசாரணை செய்ய நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

முன்னதாகவும் இதுபோன்று சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு