திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி


DLlgg3AV4AEtoGcஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை தரிசனம் செய்தார்.

ஜனாதிபதி, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற ஜனாதிபதியை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றுள்ளனர். அதன்பின்னர் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி ஓய்வெடுத்துள்ளார்

இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி தனது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரி மற்றும் சில அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றார். காலையில் நடைபெற்ற சிறப்பு தரிசன சேவையில் அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் அவரை அமர வைத்து, பட்டு சால்வைகள் போர்த்தப்பட்டன. அதன்பின்னர் லட்டு உள்ளிட்ட ஏழுமலையான் பிரசாதங்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கியுள்ளார்கள்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு