மீண்டும் நாட்டில் இரத்த ஆறு வேண்டாம்- லக்ஸ்மன் கிரியெல்ல


image_1456887746-a294ecddfaபுதிய அரசியலமைப்பே  நல்லிணக்கத்தை உருவாக்கும் புதிய ஆரம்பமாகும்.  புதிய அரசியல் அமைப்பினை தடுக்க குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடவிட வேண்டாமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

முதல் தடவையாக தமிழர் தலைமைகள் அரசியல் அமைப்பினை விருப்புடன் ஆதரித்து வருகின்றனர். இந்த வாய்ப்பினை நழுவவிடக்கூடாது, இதைவிட நல்லதொரு வாய்ப்பு இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியல் அமைப்பில் பிரதான விடயங்களில் குழப்பங்கள் இருப்பதாக மாநாயக தேரர்கள் மத்தியில் பொது எதிரணியினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் நேற்று மீண்டும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அஸ்கிரிய மாநாயக  தேரர்களை சந்தித்து தெளிவுபடுத்திய நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு