சுமந்திரனுக்கு எதிராக ஜந்து பேருக்கு ஜந்து இலட்சம் வழங்கும் சிறிதரன்?


imageproxyதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய முயற்சித்ததாகக் கூறி  சந்தேகத்தின் அடிப்படையில்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் கடந்த 19-09-2017  அனுமதித்தது.

இந்த நிலையில் பிணையில் வெளியில் வந்த சந்தேகநபர்கள் ஜந்து பேரில் கிளிநொச்சியை சேர்ந்து மூவரை கடந்த வாரம் தனது அலுவலகத்திற்கு அழைத்து சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏனைய இருவரையும் சேர்த்து தனக்கு கடிதம்  ஒன்றை எழுதி தருமாறும் தான் ஒவ்வொருவருக்கும் தலா ஜந்து இலட்சம் வீதம் வாழ்வாதாரத்திற்கான  பணத்தினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளாா்.

புலம் பெயர் உறவுகளிடம்  நீங்கள் வழங்கும் கடிதத்தை சமர்பித்து அவா்களிடம் இருந்து  பணத்தை பெற்று ஜந்து இலட்சம் ரூபா வீதம் பணத்தை வழங்குகிறேன் என உறுதியளித்துள்ளாா். அ தற்காக  ஒவ்வொருவரும் தனித்தனியே  தனக்கு முகவரியிட்டு கடிதம் ஒன்றை எழுதி தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிதரன்  தெரிவித்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு