சுதந்திர தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்துமாறு கோரி பிரச்சார நடவடிக்கை


ruthrakumarஇலங்கையில் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர்ந்து வேறு தேசங்களில் வாழும் தமிழ் மக்களிடையேயும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசியல் பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.

இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்புச் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்களில் மிகப் பெரிய செயற்றிட்டமாக இது அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு