சுகாதாரத் தொண்டர்களைப் புறந்தள்ளிவிட்டு பின்கதவால் நுழைந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவுகள்- வடமாகாண சுகாதார அமைச்சர்


0-1வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சுகாதாரஅமைச்சுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தமக்குத் தெரிந்தவர்களை டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக நியமித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதாரஅமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாணசபையின் 107ஆவது அமர்வு வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாணத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக ஒப்பந்த அடிப்படையில் ஆளணியினர் நியமிக்கப்பட்டதன் ஊடாக மாகாணசபையின் அதிகாரங்களை கொழும்புக்கு விட்டுக்கொடுத்துள்ளீர்களா என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்,

வடமாகாணத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக ஒப்பந்த அடிப்படையில் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் அனைத்தும் கொழும்பு சுகாதார அமைச்சினூடாகவே வழங்கப்பட்டன.

இந்த நியமனங்கள் தொடர்பாக நான் ஆராய்ந்தபோது, எமது மாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமக்கு வேண்டியவர்களை நியமித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயம் எமக்கு கவலையளிக்கின்றது. நாம் இன்றும் போராடிக்கொண்டிருக்கும் சுகாதாரத் தொண்டர்களுக்கே ஆதவு தெரிவித்து வருகின்றோம்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு