அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழில் ஆர்ப்பாட்டம்


625.0.560.320.160.600.053.800.700.160.90அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று  யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னாள் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

யாழ்  பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இப் போராட்டம் யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக யாழ் நகரைச் சுற்றி பேரணியாகச் சென்று மீளவும் பஸ் நிலையம் வந்து போராட்டம் நிறைவடைந்தது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு