வடமாகாண முதலமைச்சர் பிரபலமடைவதற்காக கடும்போக்கு கருத்துக்களை முன்வைக்கிறார் – ஜயம்பதி விக்கிரமரட்ண


150319182139_jayampathy_wickramaratne_512x288_jayampathywickramaratne_nocredit-1வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் பிரபலமடைவதற்காக கடும்போக்குக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என ஜயம்பதி விக்கிரமரட்ண குற்றம்சுமத்தியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் இடைக்கால அறிக்கையை நிராகரித்ததோடு, அதில் சிங்களத்தில் ‘எக்சத் ரட்ட எனவும், ஆங்கிலத்தில் யுனைரட் கன்றி (United Country) எனவும் தமிழில் ஐக்கிய இலங்கை எனவும் வரவேண்டுமென அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஊடகம் ஒன்று வினவியபோதே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் விக்னேஸ்வரன் எம் அனைவரினதும் கௌரவத்துக்குரியவராக இருந்தார். கொழும்பில் இருக்கும்போது அவர் இவ்வாறான கடும்போக்காளராகச் செயற்படவில்லை.

தற்போது அவர் மாற்றமடைந்துள்ளார். அவர் தற்போது கடும்போக்கு சிறைக்குள் அடைபட்டுள்ளார். அத்துடன் அவர் அண்மைக்காலமாக தான் பிரபலமடைவதற்கான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றார்.

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை அரசியலமைப்பை அவர் விரும்பவில்லை. அச்செயற்பாடுகள் நடைபெறாதிருக்கவேண்டுமென்பதையே அவர் விரும்புகின்றார். அரசியலமைப்பு செயற்பாடுகளை இடைநிறுத்தி நாட்டில் கடும்போக்குவாத தீயை மூட்டியவாறு இருக்கவேண்டுமென அவர் விரும்புகின்றார்.

வடக்கில் அவர் கடும்போக்கு தீயை மூட்டிக்கொண்டிருக்கும் நிலையில் தெற்கிலும் கடும்போக்குவாத தீயை மூட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் அவரது சொற் பிரயோகங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது யுனைரட் கன்றி (United Country) என வந்தால் வேறுபட்ட இராச்சியங்கள் ஒன்றிணைகின்றன என்ற பொருள்கோடலே வருகின்றது. அதனை தெற்கில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகையால் விக்னேஸ்வரனின் கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு