வட கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களை ஒன்றிணைத்து முஸ்லீம் மக்களுக்கு அதனுள் ஒரு தனி அலகை உருவாக்குவதே உசிதம் – வடக்கு முதல்வா்


Vigneswaran.png-வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு என்ன நடந்ததோ அதுவே நாளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு நடக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் உட்படசில அரசியல் வாதிகள் வடக்குக் கிழக்கு இணைப்பு இப்போது சாத்தியமில்லை. தற்போது அரசாங்கம் தருவதை பெற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்து வரும் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு இணைப்பை நடைமுறைப்படுத்த விடாமலே அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது. தமிழ்ப் பேசும் திருகோணமலை மாவட்டம் முப்பகுதியினரின் மாவட்டமாகக் கடந்த ஐம்பது வருடங்களுக்குள்ளேயே மாற்றப்பட்டுள்ளது.

சமஷ்டியில் சில தனித்துவ அலகுகளையும் உள்ளடக்கலாம். திருகோணமலை நகரத்திற்கென ஒரு சிறப்பு நிர்வாகத்தை ஏற்படுத்தலாம். வட கிழக்கு இணைப்பு எதற்காக கோரப்படுகின்றது என்பதை நாம் முற்றாக அறிந்திருக்க வேண்டும். தமிழ்ப் பேசும் பிரதேசங்கள் ஒன்றாக இல்லாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு நடந்ததே மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் நடக்கும். அரசாங்கத்திற்குப் பல அனுசரணைகள் உண்டு. நாட்டின் மத்திய அரசாங்கம் பெரும்பான்மையினரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கூடிய நாட்டு மக்கள் பெரும்பான்மையினத்தவர்கள். பிறநாடுகளுடன் ஒப்பந்தங்கள் வைத்துக் கொள்ளும் அதிகாரம் அவர்களுடையது. மகாவலி அபிவிருத்தி போன்ற சட்டங்களை அவர்களே நடைமுறைப்படுத்துகின்றார்கள். ஆகவே தான் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தையும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தையும் பெரும்பான்மையினத்தவரின் குடியேற்ற நிலங்களாக மாற்றிவருகின்றாரகள்.

திருகோணமலைக்கு விசேட நிர்வாக அந்தஸ்தை அளித்து, மிகுதி வடகிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களை ஒன்றிணைத்து முஸ்லீம் மக்களுக்கு அதனுள் ஒரு தனி அலகை உருவாக்குவதே உசிதமெனத் தோற்றுகின்றது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு