தலைவர் பிரபாகரன் உடலை பார்த்த போது குற்ற உணர்வு ஏற்பட்டது – ராகுல் காந்தி


RahulGandhiVisionary_16031தந்தை ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு காரணமாக இருந்த பிரபாகரன் உடலை பார்த்த போது குற்ற உணர்வு ஏற்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வதோதராவில் நேற்று மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது வேலைவாய்ப்பு இல்லாத கோபத்தில் மக்கள் இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை பாஜக அரசுக்கு இருப்பதாக ராகுல் கூறினார்.

தொடர்ந்து கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு, “நான் உங்களுக்கு தனிப்பட்ட ஒரு விசயத்தை சொல்கிறேன். என்னுடைய தந்தையை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொன்றார். ஆனால் இலங்கை கடற்பகுதியில் அவர் கொல்லப்பட்டு கிடந்த காட்சியை பார்த்து எனக்கு துக்கமாக இருந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

உடனடியாக பிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் அதையே தான் கூறினார். என்னுடைய அப்பாவைக் கொன்றவர் இறந்து கிடக்கிறார் ஆனால் எங்களுக்கு துக்கமாக இருந்தது, எங்களுக்கு ஒரு குற்றஉணர்வு ஏற்பட்டது என்று கூட சொல்லாம்.

இவை என் குடும்பத்தின் மதிப்புகளாகும். ஒரு கொலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும்”.

உங்கள் கருத்து
  1. BC on October 14, 2017 2:20 pm

    இலங்கை தமிழர்கள் பலரது மரணத்துக்கு காரணமாணவர் இவரது அப்பா ராஜீவ் காந்தி யாழ்பாண ஆஸ்பத்திரிலேயே படு கொலை செய்யும் இராணுவத்தை கொண்ட இந்திய நாடு.
    பிரபாகரன் உடலை பார்த்த போது இவருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டதாம் மிகவும் மோசமான அரசியல்வாதி.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு