முகமாலைக்கு அமெரிக்க தூதரக குழுவினா் விஜயம் கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளை அவதனித்தனா்


DSC07446கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று(11) பார்வையிட்டனர்
குறிதத் பகுதியில் அமெரிக்காவின் நிதி உதவியில் டாஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த குழுவினர் பார்வையிட்டனர். இதன்போது குறித்த பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைபுலிகளினால் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடி பொருட்கள், கண்ணி வெடிகள், கைகுண்டுகள், எறிகணைகள், கிளைமோர் குண்டுகள், விடுதலைபுலிகளினால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடி பொருட்கள் தொடர்பில் குழுவினருக்கு டாஸ் நிறுவன அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் நேரடியாக பார்வையிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு