பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு 100 ரூபா; மறுக்கிறது கல்வியமைச்சு


studentsஇலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என, வௌியான செய்திகளுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் ஊடகங்களுக்கு கல்வி அமைச்சர் தெரிவிக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து,  கல்வியமைச்சின் செயலாளர் எனக் கூறிய பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் மேற்கண்ட விடயத்தை மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில், கல்வி இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்த போது, அது போன்ற விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்றே அவரும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தற்போது பிரதமருடன் பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ளமையால் அவருடைய கருத்தை பெற முடியவில்லை.

இது இவ்வாறு இருக்க, கல்வி அமைச்சர் இது போன்ற கருத்தொன்றை வௌியிட்டுள்ளார் எனவும், இது சிற்நத தீர்மானமல்ல என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு