அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் முழுமையான கதவடைப்பு


22491958_1673864342658181_7501358990938159944_nஅனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (13) வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து இந்த கதவடைப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

வடக்கில் மருந்தகங்கள் தவிர்ந்த பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதோடு, அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளமையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

அதேவேளை பேருந்து சேவைகள் இல்லாமையினால் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அலுவலர்கள் குறைவாகவே சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசு அரசியல் தீர்மானமெடுத்து நிபந்தனையின்றி அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கோரிக்கைக் கடிதத்திற்கு இதுவரை ஜனாதிபதியிடமிருந்து உரிய பதிலெதுவும் வழங்கப்படாத நிலையில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இதேவேளை  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயின் அலுவலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

19 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு  எந்தவித நிபந்தனைகளுமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு