தமிழ் புத்திஜீவிகள் எனச் சொல்லிக்கொள்வோர் இடைக்கால அறிக்கையை வாசிக்காது மக்களுக்கு பொய் சொல்கிறார்கள் – சுமந்திரன் குற்றச்சாட்டு


2060586460Sumanthiranதமிழ் புத்திஜீவிகள் என அழைக்கப்படுபவர்கள் எவருமே இடைக்கால அறிக்கையை வாசிக்காது கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இந்த இடைக்கால அறிக்கை பற்றிக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் இந்த அறிக்கையை ஒருதரம் வாசித்துவிட்டு கேட்கும் கேள்விகள் அனைத்தும் புத்தி சாதுர்யமான கேள்விகளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு உதாரணமாக சட்டம் ஒழுங்கு மாகாணங்களுக்கு பகிரப்படும் எனச் சொல்கிறார்கள். ஆனால் இந்த அறிக்கையில் அதைப்பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என பல்கலைக்கழக அறிஞர்கள் தொடக்கம் பல சட்டத்தரணிகள் வரை பொதுவெளிகளில் குற்றம் சுமத்துகின்றனர்.

இடைக்கால அறிக்கையின் முதல் பந்தியிலேயே அதற்கான விடை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகவே இடைக்கால அறிக்கையினை வாசிக்காது கேள்வி கேட்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனவும் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் 50ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமஷ்டியைக் கோரிவிட்டு 70ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனிநாடு கோரியதால், சமஷ்டி என்றால் பிரிவினைவாதம் என சிங்கள மக்கள் நினைக்கிறார்கள். அதற்காகத் தான் ‘ஏகிய ராஜ்யம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதெனவும், தமிழில் ஒருமித் நாடு எனவும் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆங்கிலத்தில் யுனின்ரறி என்ற சொல் பயன்படுத்தப்படாது ‘ஏகிய ராஜ்யம்’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டதாகவும், இதனைப் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்து
 1. Vijay Rasalingam on October 13, 2017 4:03 pm

  சுமந்திரன் அண்ணாச்சி,
  உங்கட கட்சி தங்களை தமிழரசுக்கட்சி எண்டு தமிழிலயும் ஃபெடரல் பாட்டி எண்டு இங்கிலீசிலயும் ரிஜிஸ்டர் பண்ணினதாலதான் ஃபெடரல் எண்டால் தமிழரசு எண்டு சிங்களவன் நினைக்கிறான் எண்டு பிரபாகரன் வரக்கு முதலே சிங்களவர் சொன்னது உங்களுக்கு ஈசியா மறந்துபோகலம் ஆனால் எஙளுக்கு மறக்கேல்ல! சோ…இந்த புத்திஜீவி பம்மாத்து கதை விடவேண்டாம்!


 2. Vijay Rasalingam on October 13, 2017 4:06 pm

  இன்னொரு விசயம் அண்ணாச்சி,

  தேசம்நெற்றில கக்கூசுக்கு போட்ட அறிவித்தலில நடந்த குழறுபடியால தமிழனும் சிங்களத்தியும் சண்டைக்கு வந்த விசயம் இருக்கு வாசிச்சுப் பாருங்கோ.
  கக்கூசுக்கே குத்துப்படுறாங்கள் இதில ஏகயவாம் ஒருமித்தவாம் யுனிற்றறியாம்.
  முதலில உங்கட கட்டிப்பெயரை தமிழொருமித்த கட்சியோஅல்லது ஏதாவது கோதாரியோ வையுங்கோ!


 3. karuppan on October 14, 2017 10:29 am

  புத்தி ஜீவிகளுக்கு மட்டும் அல்ல சாதாரண சிங்கள தமிழ் மக்களுக்கும் இந்த குடியரசு யாப்பு விவகாரம் பல சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. இன்னும் இந்த இடைக்கால அறிக்கை முழுமையாக சாத்தியம் மிக குறைவானதாகவே தென்படுகிறது. வார்த்தைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதை விட்டு இதுதான் சரியான வழி, இதுதான் சகல மக்களுக்கும் இலங்கையின் எதிர்காலத்திற்கும் சிறந்தது என்று கூறக்கூடிய ஒரு அரசோ, தலைவர்களோ இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது. மக்களுக்கு விளங்கப்படுத்துவதை விட்டு கேள்வி கேட்பவர்களை குறை கூறுவது ஏற்புடையது அல்ல.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு