கடைந்தெடுத்த இனவாதத்துக்கு மைத்திரி ரணில் ஆதரவு – சுரேஸ் சீற்றம்


fhfவவுனியாவில் நடைபெற்றுவந்த வழக்குகளை அனுராதபுரத்துக்கு மாற்றுவதென்பது ஒரு கடைந்தெடுத்த இனவாதச் செயற்பாடு என்று விமர்சித்திருக்கும் ஈபிஆர்எல்எப் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவ்வாறானதொரு இனவாத நடவடிக்கைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒத்துளைக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு விடையம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் இன்று கதவடைப்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனையொட்டி இன்று காலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், அவர் மேலும் குறிப்பிட்டபோது,
தமது வழக்குகளை அனுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகள் கோருவது மிகச்சிறியதொரு விடையம். ஜனாதிபதி நினைத்தால் இதனை ஓரிரு நாட்களில் மாற்றியிருக்க முடியும். ஆனால் அந்தப் பிரச்சனை தீர்க்கப்படாமல் அரசியல் கைதிகள் 18 நாட்களாக போராடிவருகின்றனர். அரசியல் கைதிகள் பிரச்சினை முக்கிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டுவந்த நிலையில் பதவிக்குவந்த இந்த அரசாங்கம் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு