அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை பற்றி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் நிலைப்பாடு


hfghபுதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது கடந்த கால கசப்பான படிப்பினைகளின் அடிப்படையாக கொண்டு இலங்கையின் பல்லினத்தன்மைக்கு உரியதாக அமையவேண்டும் என்பதே காலத்தின்நிபந்தனையாகும்.

ஆனால் இதை மறுதலித்து சிங்களப்பெரும்பான்மையினரின் மேலாதிக்க உளநிலையைப் பேணும் வகையில் மீண்டும் பல்லினத்தன்மைக்குச் சவாலான அம்சங்களே இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் மீளவும் அரசியல் உரிமையற்ற நிலைக்குள்ளாக்கப்படும் நிலையேகாணப்படுகிறது. எனவே இதனை சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மாற்றியமைக்கக்கோருகின்றது.

இதன்படையில்
1. இனங்கள் ஒவ்வொன்றுக்குமுரிய சுயநிர்ணய உரிமைக்கான இடம் உறுதியளிக்கப்படவில்லை.
2. வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகத் தெளிவான உறுதியுரைகள் செய்யப்படவில்லை.
3. “எக்கய ராஜ்ஜிய” என்று குறிப்பிடுவதன் மூலமாக ஒன்றை ஆட்சியமைப்பையே தொடர்ந்தும் நிறுவமுற்பட்டுள்ளது.
4. பல இனத்தவா் வாழ்கின்ற நாட்டில் மதசார்பின்னை பன்மைத்துவம் ஆகியவற்றை நிராகரித்து பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கை பற்றி எம்மால் கிளிநொச்சியில் வைத்து கடந்த 11-02 2017 அன்று அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் கேள் சந்திப்பின்போதுசமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்திய சபை அரசியலமைப்பு மூலம் உறுதி செய்யப்படல் வேண்டும்.

இலங்கைக்குள் காணப்படும் எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் சிறப்புரிமைகள் மற்றும்பாதுகாப்பு என்பன உறுதி செய்யப்பட வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் தெளிவான வியாக்கியானம்உடையவையாக அமைதல் வேண்டும்.

மயக்கமான கருத்துகள் தப்பான மொழிமாற்றத்திற்கான சந்தர்ப்பங்கள்கொண்டவையாக இவ்விடயங்கள் அமையக்கூடாது.

மாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் காலங்களில்மாகாணசபையின் முதலமைச்சருக்கு உரியதாக வரையறை செய்யப்பட வேண்டும்.

மாகாணசபை முதலமைச்சர் நிதியம், அவசரகால நிதியம், இடர் முகாமைத்துவ நிதியம், மாகாண அபிவிருத்தி நிதியம் என்பவற்றை மாகாண சபைகள் ஸ்பாபிப்பிதற்கும் செயற்படுத்துவதற்குமான அதிகாரம்அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்தல் வேண்டும்.

மாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசின் ஆலோசனை தவிர்ந்த நேரடித்தலையீடுகள் இடம்பெறாதிருப்பதை அரசியலமைப்புத் திருத்தம் உறுதியுரைக்க வேண்டும்.

மாகாணசபையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் விடயங்களை நடைமுறைப்படுத்துதலில் குறித்த மாகாண முதலமைச்சரின் ஆலோசனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

உள்ளுராட்சிச் சபைகளின் கையாள்கைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு மற்றும் மாகாணசபையின் நேரடித் தலையீடு தவிர்க்கப்படல் வேண்டும்.

மத்திய அரசுக்கும் மாகாணசபைக்கும் இடையேயும் மாகாணசபைக்கும் உள்ளுராட்சி அமைப்புகளுக்கு இடையேயும் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அரசியல் அமைப்பு உயர் நீதிமன்றம் அதிகார பகிர்விற்கான ஆணைக்குழு என்பனவும் என்பனவும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

இவை சுயாதீனத்துடனும் சட்ட வலுவுடனும் செயற்படுத்தப்படுவதற்குரி நிறுவன அமைப்பை அரசியலமைப்புத்திருத்தம் மூலம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

உலகளாவிய மாற்றம் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் மக்களுடையஅமைதியான வாழ்க்கைக்கும் உரிய பொருத்தமான வழிமுறைகள் அடங்கிய பொறிமுறையை ஒன்றும் உருவாக்கப்படுவது அவசியமாகும்.

இன்றைய உலகம் நியாயமான போராட்டங்களையே அவற்றின் வழிமுறைகளைச் சாட்டாக வைத்து எதிர்நிலைகளின் மூலம் முறியடிக்க முற்படுகிறது. 09-2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின் உலகமயமாக்கம் புவி அரசியல் எல்லா அரசாங்கங்களும் பொருளாதார இராணுவ அரசியல் வலைப்பின்னலில்பிணைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் ஒழுங்கமைப்புக்கு எதிரான இடைஞ்சலான போராட்டங்களும்கோரிக்கைகளும் எதிர்நிலையாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது. எனவே இதனைக் கடந்து எமது அடிப்படைஉரிமைகளை உறுதியுடன் விட்டுக் கொடுக்காத புதிய அரசியல் முன்னெடுப்புகளை அறிவியல் ரீதியாகமேற்கொள்வோம்.

இதேவேளை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் காணாமலாக்கப்பட்டோர் விடயம் அரசியல் கைதிகள்விவகாரம் படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படுதல் பெண் தலைமைத்துவக்குடும்பங்களை வலுப்படுத்தல் மாற்று வலுவுடையோருக்கான பொருளாதார வலுவை ஏற்படுத்துதல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குதல் என்பன எமது சமூகம் வேண்டி நிற்கும் விசேட ஏற்பாடுகள் ஆகும். இதனை நாம் மீளவும் வலியுறுத்தி நிற்கின்றோம்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு