இழுவைப்படகு மீன்பிடியை நிறுத்த 5ஆண்டுகள் கேட்கும் இந்தியா


1-569-765x510இனிவரும் காலங்களில் இழுவைப்படகு மீன்பிடி முறைக்கு இந்திய அரசாங்கம் அனுமதியளிக்காது எனவும், இழுவைப்படகு மீன்பிடியை முழுமையாக நிறுத்துவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவைப்படுவதாக இந்திய அரசாங்கம் தம்மிடம் தெரிவித்ததாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய – சிறிலங்கா அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தியாளர்சந்திப்பு நேற்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்தெரிவிக்கையில்,

இச்சந்திப்பில், மீன்பிடி தொடர்பில் இலங்கை சட்டங்களை இறுக்கியுள்ளமை, இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்காமை, இந்திய மீனவர்களின் அதிகரித்த கைதுகள் தொடர்பாக இந்தியப் பிரதிநிதிகள் கோரிக்கைகள் முன்வைத்தனர்.

இந்தச் செயற்பாடுகளுக்கான காரணங்களைக் காட்டி அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம்.

மீன்பிடித்துறையில் இழுவை மீன்பிடிமுறையின் பாதிப்பையும் பிரதிகூலங்களையும் தெளிவுபடுத்தினோம்.

அதனi அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இது சாதகமான நிலமை என்றே நாம் கருதுகின்றோம். இனிமேல் இழுவைப்படகு மீன்பிடி முறைக்கு இந்தியா அனுமதிப்பத்திரம் வழங்காது எனத் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தியப் படகுகளில் சமிக்ஞைத் தொழிநுட்பக் கருவிகளைப் பொருத்துமாறும் இந்தியப் பிரதிநிதிகளிடம் நாம் கோரினோம்.

அப்படிச் செய்வதன்மூலம் இந்தப் படகுகள் எங்கு செல்கின்றன என்பதை அறிந்துகொள்ளமுடியும். இந்தக் கோரிக்கைக்கு இந்தியா இணக்கம் தெரிவித்தது எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து
 1. BC on October 17, 2017 4:14 pm

  இழுவைப்படகு மீன்பிடியை நிறுத்த 5ஆண்டுகள் இந்தியா ஏன் கேட்கிறது என்றால் இலங்கைக்குள் சென்று களவாவா மீன் பிடிப்பது தமிழ்நாட்டு கொள்ளை கூட்டத்தின் உரிமை என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கேட்கின்றனர்.
  தமிழ்நாட்டு மீனவ மக்களின் வாழ்விலை நிலை இந்தியாவில் இது தான்.
  நல்ல தண்ணீர் ஓடைக் குப்பத்தில் கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதற்கும் சாலை விரிவாக்கத்திற்கும் சிபிசிஎல் நிறுவனம் மீனவர்களின் வீடுகளை இடித்தது. இதில் வீடுகளை இழந்த மீனவ மக்களைச் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்.
  தங்களது வீடுகளை இழந்த மீனவக் குடும்பத்தினர் போராடி வருகின்றனர். சமீபத்தில் தங்கள் பிரச்சினைக்காகப் போராடிய மக்களைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களை காவல் இணை ஆணையர் சுதாகர் பகிரங்கமாக மிரட்டியதும் நடந்தது.
  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ” நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தமிழக அரசு இங்குள்ள மீனவர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு