முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக TNAஉடன் NFGG விசேட சந்திப்பு! : NFGG ஊடகப் பிரிவு


TNA_Met_NFGG_19Oct2017_02முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான விசேட சந்திப் பொன்று 19.10.2017 நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும்(NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில்(TNA) இடம்பெற்றது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடை பெற்ற இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அது தொடர்பான காணிப்பங்கீடு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதில், நல்லாட்சிக்கான் தேசிய முன்னணி சார்பாக அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் அவர்களும் அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான, முஹம்மட் ஹனான் ஆகியோருடன் முல்லைத்தீவு மக்கள் சார்பாக அஸ்செய்க் சப்ரின் மற்றும் மௌலவி றிபாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், சிறீதரன், சார்ள்ஸ் நிர்மல நாதன் மற்றும் வியாளேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

கடந்த வட மாகாண சபைத் தேர்தலின் போது TNA உடன் NFGG செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வட மாகாண மக்களின் மீள் குடியேற்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் வட மாகாண மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களை TNA உடன் NFGG தொடர்ச்சியாக பேசிவருகிறது. அந்த வகையில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பாக TNA உடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் NFGG ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மற்றுமொரு முக்கிய சந்திப்பாகவே நேற்றைய சந்திப்பு இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த NFGG பிரதிநிதிகளும் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள் என்பவற்றை தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துக் கூறினர்.

TNA_Met_NFGG_19Oct2017_01அங்கு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தரவே முயற்சிக்கிறது என உறுதியளித்ததோடு இரண்டு சமூகத்தவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் தீர்வுகளைக் காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் , இம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு TNA முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அதற்கான அறிக்கையொன்றை தயாரித்து அதனடிப்படையில் தீர்வுகளைக் காண முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு