அரியாலையில் துப்பாக்கிச் சூடு இளைஞன் படுகாயம்


625.0.560.320.160.600.053.800.700.160.90அரியாலைப் பகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் கடற்தொழில் செய்பவர் என்றும் வீதியால் சென்று கொண்டிருந்தவர் மீது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார் எனத் தெரியவருகின்றது. துப்பாக்கிச் சூட்டில் டொன்பொஸ்கோ ரிக்மன்என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினை நடத்தியவர்கள் காவல்துறையினர் அல்லது படையினராக இருக்கும் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு  சென்ற பொலீஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து
  1. Vijay Rasalingam on October 25, 2017 10:28 pm

    ஜெயபாலன்,

    ஆம் அரியலையில் துப்பாக்கிச்சூடு இளைஞன் படுகாயம் எனத்தலைப்பிட்டு உள்ளே இன்னொரு இளைஞன் பலியானது பற்றிய செய்தியை எழுதிய தேசம்நெற் நிருபருக்கு முதலில் பள்ளிக்கூடம் போ என அட்வைசை சொல்லாமல் சொல்லுறியள் போல கிடக்கு !!!!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு