புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க படையினரின் இறுதித்தாக்குதல் ஆரம்பம்

wanni-war.jpg சிவிலியன்களை மீட்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக இராணுவத் தாக்குதல் படையணிகள் சுற்றிவளைத்துள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

களநிலையில் மிக உக்கிரத் தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் நேற்று (மார்:19) புலிகளின் தடைநிலைகள் மீது கடும் தாக்குல் நடத்தி அவர்களுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.  இப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 9வது கெமுனுப் படையணியினர் 11 எல்ரிரிஈயினரின் உடல்கள் 17 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 26 கைக்குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர்.

இதேவேளை இரணப்பாலைப் பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 7வது சிங்கப் படையினர் 3 உயர் நவீன தொடர்புசானங்கள் இரு பிரதான நிலைய தொடர்பு சாதனங்கள் மற்றும் இரு கொண்டு செல்லக்கூடிய தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இப்பகுதியில் நிலைகொன்டுள்ள 58 வது டிவிசன் படைப்பிரிவின் ஸ்ணைபர் படையினர் 13 புலிகளை கொன்றுள்ளனர். மேலும் படையினர் புதுக்குடியிருப்புக்கு கிழக்காக புலிகளால் கைவிடப்பட்ட கடற்புலிகளின் முகாமைக் கைபற்றியுள்ளதுடன் இம்முகாமிலிருந்த உயர் நவீன தொடர்புசாதனங்கள், செய்மதி அன்ரனாக்கள், வடிவமைக்கப்பட்ட படகுகள், சிறிய நீர்மூள்கி இயந்திரம், கொம்பியூட்டர்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 1983 சிவிலியன்கள் பாதுகாப்புத் தேடி 58வது டிவிசன் படையினரிடம் நேற்று சரணடைந்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • accu
    accu

    தயவு செய்து உங்களின் இந்தப் பணியை விரைந்து செயல் படுத்தி அங்கு அல்லலுறும் மக்களையும் அநியாயமாய் வலிந்து இணைக்கப்பட்ட குழந்தைப் போராளிகளையும் காப்பாற்றுங்கள். உங்களுக்கு மொத்தத் தமிழரும் ஜென்மத்துக்கும் நன்றியுடையவராக இருப்பார்கள்.

    Reply