பிரிட்டிஷின் பிரபல நடிகை நடாசா ரிச்சர்ட்சன் கனடாவில் பனிச்சுறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை திடீரெனச் சறுக்கி விழுந்ததால் உயிரிழந்தார். 45 வயதான நடாசா கனடாவிலுள்ள பிரபல பூங்காவில் நேற்று முன்தினம் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிழே விழுந்ததால் தலையில் கடும் காயம் ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாங்க முடியாத வலியால் துடித்த அவரை கனடா நாட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அமெரி க்காவில் உள்ள நியூயார்க் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் நேற்றுக் காலை அவர் மரணம் அடைந்தார். நடாஷாவின் கணவர் நீசலும் நடிகராவார். அவர் நடாஷாவுடன் இருந்து அவரைக் கவனித்து வந்தார். நடாஷாவின் தந்தை டோனி சினிமா டைரக்டர் ஆவார். அவர் 1991ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.
Kusumpan
வாழ்க்கையே இது பொய்யடா காத்தடைத்த பையடா