நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை சம்பந்தன் மீறினாரென சிவசக்தி ஆனந்தன் சபாநாயகரிடம் முறைப்பாடு


sivasakthy-anantha-200x120புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பததை தனக்கு வழங்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதிர்கட்சித்தலைவர் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்த போது அதற்கான சந்தர்ப்பத்தை சம்பந்தன் வழங்க மறுத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.இதன்போது ஒரு மக்கள் பிரதிநிதி தான் சார்ந்த மக்களின் கருத்தை நாடாளுமன்றில் தெரிவிப்பதற்கான சிறப்புரிமையை சம்பந்தன் பறித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில் இதுவிடயம் தொடர்பாக தான் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் முறைப்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்த அவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கான நேரத்தை சபாநாயகரிடம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு