தனி உள்ளூராட்சி சபை கோரி முஸ்லிம்கள் கடையடைப்புப் போராட்டம்


98541516_harthal-10அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தை தனி உள்ளூராட்சி சபையாக மாற்றுமாறு கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த திங்கட் கிழமையிலிருந்து இன்று புதன்கிழமை வரை தமது கடைகளை மூடி இப்போராட்டம்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால், அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்கள் நிர்வாகம், உலமா சபை மற்றும் பொது அமைப்புகள் கூடி இது தொடர்பான தீர்மானத்தை எடுத்திருந்தன.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற கடையடைப்பு போராட்டம் காரணமாக அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசாங்க வங்கிகள் மற்றும் பாடசாலைகள் இயங்கவில்லை. வீதிகளிலும் பொது இடங்களிலும் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

அம்பாறையில் தனி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றாக சாய்ந்தமருது காணப்படுகின்றது. இப்பிரதேசத்திற்கு வருகை தரும் அரசியல் வாதிகள் அனைவரிடமும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் வாக்குறுதிகளை வழங்கினார்கள் எனவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு