மத்திய அரசுடன் இணைந்து செயற்பட நான் தயார் – வடமாகாண விவசாயஅமைச்சர் சிவனேசன்


ddcp54797976464-1மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே எமது பிரதேசங்களை அபிவிருத்திசெய்யமுடியும் என்ற காரணத்தினால் நான் இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளேன் என வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாயஅமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணசபைக்குகடந்த காலங்களில் பெரும் திட்டங்கள் கிடைத்திருந்தன. அதனை முதல் இருந்த அமைச்சர் பல காரணங்களைச் சொல்லி தட்டிக்கழித்துவிட்டார். அதன்காரணமாக பெரும் திட்டங்கள் எமது கையைவிட்டுப் போயுள்ளன.

எமது நிதியில் பெரும் திட்டங்களைச் செய்யமுடியாது. எமது நிதியைக் கொண்டு பால் கொள்வனவு செய்யும் பாத்திரங்களையே வாங்கமுடியும்.

பெரும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டுமெனில் மத்திய அரசுடன் இணைந்தே பயணிக்கவேண்டும். கடந்த காலஅமைச்சின் தவறை நானும் செய்ய விரும்பவில்லை.

வான் விவசாய அமைச்சராக பதவி ஏற்றதும் கொழும்பு அமைச்சர்களுடன் கலந்துரையாடினேன். வடக்கிற்கு பெரும் திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், அதனை முதல் இருந்த அமைச்சர் சாக்குப் போக்குச்சொல்லி தட்டிக்கழித்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு வடக்கில் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதற்கு சாக்குப் போக்குச்சொல்லி தட்டிக்கழிக்காது அவர்களுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம்.

கடந்த அமைச்சு செய்ததைப்போல் நான் எதையும் தட்டிக்கழிக்கப்போவதில்லை.

அத்துடன் வடமாகாண விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் அல்லது அரை மானிய அடிப்படையில் விதை நெல்லைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்அனுப்பியிருந்தேன்.

அதற்கு வருட முடிவில் கேட்டுள்ளதால்தன்னால் எதுவும் செய்யமுடியாதுள்ளதெனவும், முதலில் கேட்டிருந்தால் செய்து தந்திருப்பதாகவும் கூறியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு