மத்துகம இறைச்சிக்கடையை கொள்வனவு செய்த பௌத்த தேரர்


1088832029monk-meat-shop-மத்துகம பிரதேச சபையினால் பொதுச் சந்தையில் நடத்திச் செல்லப்பட்ட இறைச்சிக் கடை ஒன்றை பௌத்த தேரர் ஒருவர் கேள்விப்பத்திரம் மூலம் கொள்வளவு செய்துள்ளார்.

களுபஹன சேலதெலாராமய விகாரையின் விகாராதிபதி மாவிட்ட ஞானரத்ன தேரரே இவ்வாறு கொள்வனவு செய்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு குறித்த இறைச்சிக்கடை பிரிதொரு வர்த்தகரினால் 2,260,150 ரூபாவுக்கு பெறப்பட்டுள்ளதுடன், இம்முறை 2018ம் ஆண்டிற்காக குறித்த ​தேரரினால் 3,225,622 ரூபாவுக்கு பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள தேரர்,

மத்துகம நகரம் தற்போது புனித நகரமாக இருக்கின்றது. இந்நிலையில் இங்கு இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்தோம். அதன்படி பிரதேச சபை அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்த போதிலும், நகர நிர்வாக சட்டத்திற்கமைய இது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு அவர்களால் முடியவில்லை.

இதன்காரணமாக 2018ம் ஆண்டுக்கான கேள்விப் பத்திரத்தின் போது விண்ணப்பித்து, அந்தக் கடையை பெற்று மூடுவதற்கு தீர்மானித்தோம் என்றார்.

எவ்வாறாயினும் கேள்விப்பத்திரம் முலம் பெறப்பட்ட இறைச்சிக் கடை ஒன்றை மூடிவிட முடியாது என்று பிரதேச  சபை செயலாளர் கூறியுள்ளார். இறைச்சிக் கடையை கேள்விப்பத்திரம் மூலம் பெற்றுக் கொண்டவர்கள் விரைவில் கடையை திறக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு