நல்லிணக்கத்திற்காகவே ஆளுநராக பணியாற்றுகிறேன் -றெஜினோல்ட் குரே


maxresdefault-7-350x175நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் தென்னிலங்கையிலிருந்து இங்கு வருகை தந்து ஆளுநராகப் பணி செய்கின்றேன் என வடாமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வேலணை மத்தியகல்லூரியின் பெற்றோர் தின விழா இன்று செவ்வாய்க்கிழமை(31) முற்பகல் 10 மணி முதல் பாடசாலையின் அதிபர் சிவகாமி கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானத்தினையும் திறந்து வைத்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய வடமாகாண ஆளுநர், இந்தப் பாடசாலை சி.டபிள்யு டபிள்யு கன்னங்கரா அவர்களினால் நாடுமுழுவதும் உருவாக்கப்பட்ட 54 பாடசாலைகளில் ஒன்றாக உருவாக்கப்பட்ட பாடசாலை. இந்தக் காலப்பகுதியில் வட மாகாண மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். முன்னைய காலத்தில் எவ்வாறு தமிழ் மக்கள் கல்வியிலே சிறந்து விளங்கி உயர் பதவிகளை வகித்திருந்தார்களோ, பேராசியர்யகள், வைத்தியர்கள், இஞ்சினியர்கள், அரசியல்வாதிகளாக இருந்தார்களோ அவ்வாறான நிலைமை மீண்டும் உருவாக வேண்டும்.

மத்திய அரசும் வடமாகாணசபையும் இணைந்து நல்ல ஆசிரியர்களை தந்திருக்கின்றார்கள், நல்ல புத்தகங்களை தந்திருக்கின்றார்கள், நல்ல கட்டங்களை தந்திருக்கின்றார்கள். நவீன வசதிகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி கல்வியில் உயரவேண்டும். படித்ததன் பிற்பாடு அவர்கள் தமது தாய் தந்தையரை நல்ல முறையில் பார்க்க வேண்டும் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும், வட மாகாணத்தில் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் மழை பெய்கின்றது. ஏனைய மாதங்கள் கடும் வெப்பம் நிலவுகின்றது. அதனால் இங்கு பாரிய குடிநீர் பிரச்சினை காணப்படுகின்றது. இன்று இங்கே மழை பெய்து கொண்டிருக்கின்றது. அதனை நாம் நேசிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு