பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உளநல வலுவூட்டல் மூலம்; நிவாரணம் ஜப்பானிய நிபுணர் வலியுறுத்தல்


IMG_1042இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய வழக்கு தொடுனர் கலாநிதி நொக்குச்சி தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கு 27ம் திகதி வருகை தந்திருந்தார். இக்கலந்துரையாடலில் உலக நாடுகளில் நல்லிணக்கம் தொடர்பான சிறந்த நடைமுறைகளையுயும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக கொங்கோ, உகண்டா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இன முரண்பாடுகளுக்கு காரணமாக இருந்த பிரதேசங்களுக்கு இடையிலான பொருளாதார வேறுபாடுகளை குறைப்பதற்கான உபாயங்களாக உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வாழ்வாதாரம், துறைசார் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்ததன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்நாடுகளில் யுத்தம் முடிவுற்ற பின்னரான காலப்பகுதியில் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் புனர்வாழ்வளிப்பு, பிரதேசங்களுக்கிடையிலான பொருளாதார இடைவெளிகளை குறைத்தல் போன்ற செயற்பாடுகள் துரிதகதியில் மேற்கொள்ளபட்டதென கலாநிதி நொக்குச்சி சர்வதேச அனுபவங்களின் அடிப்படையில் வலியுறுத்தினார். சர்வதேச நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார கருத்திட்டங்கள் மூலம் சமூகமயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதுடன் இச்செயற்பாடுகள் மீண்டும் ஏற்படாது இருப்பதற்கு அது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார். போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் உளநல வலுவூட்டல் மூலமும் நிவாரணம் வழங்கப்பட்டன.

இளம் சமுதாயத்தை நல்லிணக்க செயன்முறையில் ஒன்றிணைப்பதற்கு பாடசாலை சார்ந்த வேலைத்திட்டங்கள் வாய்பானது எனவும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். நிலைமாற்ற நீதியின் பொறிமுறைகளான உண்மையைக் கண்டறிதல், ஆற்றுப்படுத்தல், நீதி மற்றும் பொறுப்புக் கூறுதல் மற்றும் இழப்பீடு வழங்கல், பிரச்சனைகள் மீண்டும் வராது தடுத்தல் போன்றவற்றை ஒரு சமூகத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாது அனைத்து சமூகத்தையும் உள்ளடக்கியதாக வியாபகப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுத்தினார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி செயற்திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தும் போது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கருத்திட்டங்களான நல்லிணக்க நட்புறவு பாடசாலைகள், நல்லிணக்க நட்புறவு பல்கலைக்கழகங்கள், சமாதான ஊடகம் , சமய அறநெறி பாடசாலைகளின் கற்கைகளில் நல்லிணக்க செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தல், மாவட்ட மட்டத்தில் சமாதான குழுக்கள் மூலம் பதற்ற நிலைகளை குறைத்தல் போன்ற கத்திட்டங்களை விளக்கினார். மேலும் காணாமல் போனோhர் அலுவலகத்தை செயற்படுத்துதல், வடகிழக்கு மாகாணங்களில் 50,000 கல் வீட்டுத்திட்டம், வீதி அபிவிருத்தி திட்டங்கள், பொருளாதார வலுவூட்டல் திட்டங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் என்பவற்றின் மூலம் பிராந்திய வேறுபாடுகளைக் குறைப்பதற்கான ஆற்றுப்படுத்தல் வேலைத்திட்டங்களை அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி விளக்கினார்.

இக்கருத்திட்டங்கள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின வழிகாட்டலில் முன்னெடுக்கப்படுவதை தெளிவுபடுத்தினார். இக்கலந்துரையாடலில் ஜப்பானிய பிரதி தூதுவர் கொஜி யாகி, அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமமோட்டோ, அமைச்சின் சிரேஸ்ட அலுவலர்கள், நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான அலுவகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு