தமிழ் மக்களின் ஆணையை கூட்டமைப்பு மீறுகிறது ஒப்புக்கொள்கிறார் எம்.ஏ.சுமந்திரன்


z_p01-Sumanthiranவடக்கு – கிழக்கில் சமஷ;டி முறையில், மதச்சார்பற்ற ஒரு தீர்வுக்கே மக்கள் தமக்கு ஆணையைத் தந்துள்ளபோதும், அதனை நாம் மீறிச் செயற்படும்போது அந்த மக்களே எம்மை குற்றம் சொல்வதாகவும், அவ்வாறு சொல்வது உண்மை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச்சபைக் கூட்டம் 30.10.2017 கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றும்போது,

இந்த அரசமைப்பு நகல் இப்போது பூர்வாங்க நிலையில்; இருந்தாலும் கூட, இப்படி ஓர் அரசமைப்பு உருவாக்க முயற்சியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஒன்று பங்களிப்பது இதுதான் முதல் தடவை.

அரசமைப்பு புதிதாக மாற்றப்படும் என்பதைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவும் கூறினார். ஐக்கியதேசியக்கட்சியும் கூறியது. அவர் எப்படி அரசமைப்பைக் கொண்டு வருவார் என்று கூறினாரோ அந்த அடிப்படையில்தான் இப்போது அரசமைப்பு கொண்டு வரப்படுகின்றது. ஆகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைப்படி 97 வீதமான மக்களின் விருப்பப்படி இந்த அரசமைப்பு உருவாக்கப்படுகின்றது.

நாங்கள் அதிக அதிகாரப் பரவலாக்கலுடன் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு காண முயல்கிறோம். எங்கள் மக்கள் வடக்கு கிழக்கில் மதச்சார்பற்ற சமஷ;டி அடிப்படையிலான தீர்வுக்கு ஆணை தந்துள்ளார்கள். ஓர் இணக்கமான தீர்வை எட்டுவதற்காகவே நாம் முயற்சிக்கிறோம். ஆனால் எமது மக்கள் தாம் தந்த ஆணையை நாம் மீறிவிட்டோம் என எம்மைக் குற்றம் சொல்கிறார்கள். என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு