வடக்கில் பின்தாங்கியவர்களின் மேம்பாட்டுக்கு ஐரோப்பா உதவும்


781005857erope-kure-Lவடக்கில் பின்தாங்கி நிலையில் இருக்கும் மக்களுக்கான உதவிகளையும், அது தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முயற்சிக்கான வேலைவாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்க ஐரோப்பிய நாடுகள் முன்வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமை வகிக்கும் தலைமைத்துவ பாராளுமன்ற உறுப்பினர் ஐீன் லெம்பட் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே தெரிவித்தார்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐின் லெம்பட் தலைமையிலான 06 அடங்கிய பாராளுமன்ற குழுவினர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்தனர்.

இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இன்று வடமாகாணத்திற்கு விஐயம் செய்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஐயம் செய்துடன் வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரேவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்திய இணைப்பு நாடுகளினால் முன்னேடுக்கப்படுகின்ற வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐின் லெம்பட் கருத்து தெரிவித்த போது நாட்டின் நல்லிணக்க புரிந்துணர்வு தொடர்பாக பாரிய முன்னேற்றம் இருந்தாலும் மக்களுடைய இன ஐக்கியம் கட்டியேழுப்பட வேண்டும்.

எனவே அவ்வாறான விடயத்தில் எமது சார்பாக நடவடிக்கை முன்னேடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்..

எமது எண்ணக் கருவிற்கான புதிய வழிகளிலான நலன் திட்டங்களை நாம் எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

எனவே, எமது எண்ணத்திலான விடயத்தில் முழு அளவிலான ஒத்துழைப்பு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் வடமாகாண ஆளுநரின் மேலதிக செயலாளர் செல்வநாயகம் மற்றும் தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு