சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை புதிய அரசியலமைப்பினூடாகவே உறுதிப்படுத்த முடியும்

Mangala-Samaraweeraசுதந்திரத்திற்காக இன,மத,கட்சி பேதமின்றி செயற்பட்டது போன்று புதிய யாப்பு உருவாக்குவதற்கும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மனித உரிமை பற்றி புத்தரே முதலில் கூறியுள்ள நிலையில் மனித உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புதிய யாப்பு உருவாக்கும் நடவடிக்கைக்கு பௌத்தர்கள் எவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்பு சபை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் இனப்பிரச்சினையொன்று கிடையாது என புத்தியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள் என மலராத மொட்டு கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு குறித்து மக்களை அறிவூட்டும் வெண்தாமரை இயக்க திட்டத்தில் அவர் இதனை கூறியிருந்தார்.இன்று வேறு கதை கூறுகிறார்.

1929 ஆம் ஆண்டு மோர்னிங் லீடர் பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதிய எஸ்.டபிள்யு ஆர்.டி பண்டாரநாயக்க,நாட்டில் இனவாதி போக்குள்ள சிலரே உள்ளதாக குறிப்பிட்டார்.நடுநிலையான மக்களே நாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.இன்றும் அதே நிலை தான் உள்ளது. பல் இனங்களிடையே இருக்கும் சிறந்தவற்றை இணைத்து சகலருக்கும் நியாயம் நிலைநாட்ட வேண்டும் என டி.எஸ்.சேனநாயக்க கூறியிருந்தார்.ஜே.வி.பி தலைவர் விஜேவீரவும் சிறுபான்மையினர் கூடுதலாக இருக்கும் பகுதிகளில் சுயநிர்ணய உரிமை வழங்க பிரேரித்திருந்தார்.இடதுசாரி கட்சிகளும் இவை தொடர்பில் ஆதரவாக கருத்து வெ ளியிட்டிருந்தன.

தமக்குறிய நிலப்பிரதேசத்தில் அரசியல் முறையை அந்த பகுதி மக்கள் கையிலெடுக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இதனை யதார்த்தமாக்க அவர் முயற்சி எடுத்தார்.இன்று அரசியலமைப்பிற்காக பிரதான நோக்கம் குறித்து தெரியாது. சிறு இனவாத குழு புதிய யாப்பை நிராகரிக்கிறது. மைத்ரிபால சிறிசேன சகல இன மக்களினதும் உண்மையான ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் ஆணையின் பிரகாரம் புதிய யாப்பிற்காக அரசியலமைப்பு சபையை நியமித்தார்.பதவிக்கு வந்து ஒரு வருட காலத்தில் அவர் அதற்காக முன்னெடுப்புகளை செய்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் இந்த முயற்சி வரலாற்று முக்கியமானதாகும். இந்த சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது. யுத்தத்தினால் சகல மக்களும் பாதிக்கப்பட்டார்கள். மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. நாடு பின்தள்ளப்பட்டது.

புதிய யாப்பை உருவாக்கும்பணி சகல உறுப்பினர்களினும் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது .70 வருட காலத்தில் முதன்முறையாக கலந்துரையாடல் நடத்தி எதிர்காலத்திற்கு உகந்த அடித்தளடம் இட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன,மத குல ரீதியான பிளவுபட்டிருக்கும் நாம் ஒரே நாட்டவராக ஒன்றுபட்டு முன்னேற வேண்டும். சுதந்திரத்திற்காக இன,மத,கட்சி பேதமின்றி செயற்பட்டது போன்று புதிய யாப்பு உருவாக்குவதற்கும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மனித உரிமை பற்றி புத்தரே முதலில் கூறியுள்ள நிலையில் மனித உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புதிய யாப்பு உருவாக்கும் நடவடிக்கைக்கு பௌத்தர்கள் எவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்பு சபை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் இனப்பிரச்சினையொன்று கிடையாது என புத்தியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள் என மலராத மொட்டு கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு குறித்து மக்களை அறிவூட்டும் வெண்தாமரை இயக்க திட்டத்தில் அவர் இதனை கூறியிருந்தார்.இன்று வேறு கதை கூறுகிறார்.

1929 ஆம் ஆண்டு மோர்னிங் லீடர் பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதிய எஸ்.டபிள்யு ஆர்.டி பண்டாரநாயக்க,நாட்டில் இனவாதி போக்குள்ள சிலரே உள்ளதாக குறிப்பிட்டார்.நடுநிலையான மக்களே நாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.இன்றும் அதே நிலை தான் உள்ளது. பல் இனங்களிடையே இருக்கும் சிறந்தவற்றை இணைத்து சகலருக்கும் நியாயம் நிலைநாட்ட வேண்டும் என டி.எஸ்.சேனநாயக்க கூறியிருந்தார்.ஜே.வி.பி தலைவர் விஜேவீரவும் சிறுபான்மையினர் கூடுதலாக இருக்கும் பகுதிகளில் சுயநிர்ணய உரிமை வழங்க பிரேரித்திருந்தார்.இடதுசாரி கட்சிகளும் இவை தொடர்பில் ஆதரவாக கருத்து வெ ளியிட்டிருந்தன.

தமக்குறிய நிலப்பிரதேசத்தில் அரசியல் முறையை அந்த பகுதி மக்கள் கையிலெடுக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இதனை யதார்த்தமாக்க அவர் முயற்சி எடுத்தார்.இன்று அரசியலமைப்பிற்காக பிரதான நோக்கம் குறித்து தெரியாது. சிறு இனவாத குழு புதிய யாப்பை நிராகரிக்கிறது. மைத்ரிபால சிறிசேன சகல இன மக்களினதும் உண்மையான ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் ஆணையின் பிரகாரம் புதிய யாப்பிற்காக அரசியலமைப்பு சபையை நியமித்தார்.பதவிக்கு வந்து ஒரு வருட காலத்தில் அவர் அதற்காக முன்னெடுப்புகளை செய்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் இந்த முயற்சி வரலாற்று முக்கியமானதாகும். இந்த சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது. யுத்தத்தினால் சகல மக்களும் பாதிக்கப்பட்டார்கள். மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. நாடு பின்தள்ளப்பட்டது.

புதிய யாப்பை உருவாக்கும்பணி சகல உறுப்பினர்களினும் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது .70 வருட காலத்தில் முதன்முறையாக கலந்துரையாடல் நடத்தி எதிர்காலத்திற்கு உகந்த அடித்தளடம் இட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன,மத குல ரீதியான பிளவுபட்டிருக்கும் நாம் ஒரே நாட்டவராக ஒன்றுபட்டு முன்னேற வேண்டும். அரசியலமைப்பினூடாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு