சுயாட்சி அடிப்­ப­டை­யில் அதிகாரங்கள் பகி­ரப்­பட்டு தீர்வளிக்கப்படவேண்டும் -மாவை


Mavai-Senathiraja-718புதிய அர­ச­மைப்­பில் கூட்­டாட்சி என்ற சொற்­ப­தம் இடம்­பெ­ற­வேண்­டும். அவ்­வாறு இடம் பெ­றா­ விட்­டா­லும் கூட்­டாட்­சிக் கட்­ட­மைப்பை அது கொண்­டி­ருக்­க­வேண்­டும். அந்த எதிர்­பார்ப்­பு­டன் மேல­தி­க­மான செயற் பா­டு­கள் முன்­னெ­டுக்கப்படவேண்­டும்.

இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் .சோ.சேனா­தி­ராசா.

ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால அறி­வித்த சர்­வ­கட்சி மாநாடு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை நீர்த்­துப்­போ­கச் செய்­யும் அல்­லது காலத்தை இழுத்­த­டிக்­கும் செயலா என்று சந்­தே­கப்­பட வைத்­துள்­ளது என் றும் அவர் குறிப்­பிட்­டார்.

இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கூட்­டாட்­சிக் கோரிக்­கையை சிங்­கள மக்­கள் விரும்­ப­வில்லை, அவர்­கள் அச்­ச­ம­டை­கின்­றார்­கள் என்று கூறு­கின்­ற­னர். கூட்­டாட்சி பிரி­வினை அல்ல. எமது கட்­சிக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கில் நீதி­மன்­றமே தனது தீர்­பில் அத­னைத் தெளி­வா­கக் கூறி­யுள்­ளது.

கூட்­டாட்­சியை வழங்­கி­னால் நாடு பிள­வ­டை­யும் என்று கூறும் குழு­வி­னர் ஏன் அவ்­வாறு கூறு­கி­றார்­கள்? தமது ஆட்­சி­யில் நடை­பெற்ற போர்க்­குற்­றங்­கள், ஊழல் மோச­டி­களை மறைப்­ப­தற்கே இத்­த­கைய பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர். இதனை நம்பி சில பௌத்த மதத் தலை­வர்­கள் கருத்­து­ரைப்­பது கவ­லை­யா­க­வுள்­ளது.

இணைந்த வடக்கு – கிழக்­கில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்ட கூட்­டாட்சி முறை­மை­யைக் கோரு­கின்­ற­போது தற்­போது முஸ்­லிம் சகோ­த­ரர்­கள் சிலர் அதனை எதிர்க்­கின்­ற­னர். வடக்கு – கிழக்கு இணை­கின்­ற­போது முஸ்­லிம்­க­ளின் வேண­வாக்­க­ளைப் பூர்த்தி செய்­யும் வகை­யி­லான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்­றோம்.

இடைக்­கால அறிக்கை மீதான விவா­தம் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கை­யில் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பா­கக் காணப்­ப­டும் சில தவ­றான அபிப்­பி­ரா­யங்­களை நீக்­கும் பொருட்டு எதிர்­கா­லத்­தில் சர்வ கட்சி மாநாடு உட்­பட மூன்று படி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்த எதிர்­பார்ப்­ப­தாக அரச தலை­வர் தெரி­வித்­தி­ருக்­கின்­றார். இது எமக்­குப் பலத்த சந்­தே­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

அர­ச­மைப்­புச் செயற்­பா­டு­களை வலு­வி­ழக்­கச்­செய்­யும் வகை­யி­லான இழுத்­த­டிப்பை மேற்­கொள்­வ­தற்­கான ஒரு நட­வ­டிக்­கையா என்ற கேள்­வி­யும் எழுக்­கின்­றது. ஜனாதிபதி ஏன் இவ்­வா­றான திடீர் அறி­விப்­பி­னைச் செய்ய வேண்­டும் என்­பதே எமது கேள்­வி­யா­கின்­றது.

அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல காணி அதி­கா­ரம் குறித்து தெரி­வித்த கருத்து கவ­லை­ய­ளிக்­கின்­றது. காணி அதி­கா­ரம் காணி ஆணைக்­கு­ழு­விற்கே என்று கூறி­யுள்­ளார். இதனை ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது. காணி அதி­கா­ரம் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

தேசிய கொள்­கை­களை கொழும்பு அரசு கொண்­டி­ருந்­தா­லும் காணி அதி­கா­ரங்­கள் மாகாண சபை­க­ளுக்கே வழங்­கப்­பட வேண்­டும்.

வடக்கு – கிழக்கு இணைந்த பிர­தே­சத்­தில் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யில் உள்­ளக சுயாட்சி அடிப்­ப­டை­யில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்டு தீர்­வ­ளிக்­கப்­ப­ட­வேண்­டும் என்ற ஆணை­யையே எமது மக்­கள் வழங்­கி­யுள்­ளார்­கள்   என்­றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு