ஆஸி. பிரதமரைச் சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி


41447726Prime-Minister-met-President-Maithripala-Sirisenaஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டர்ன்புல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இன்று காலை 07.10 அளவில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விஷேட விமானத்தில் அவர் மற்றும் 13 பேர் அடங்கிய குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.

இதனையடுத்து, அவர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இதன்போது, மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க வேலைத் திட்டங்கள் மற்றும் ஆட்கடத்தல், போதைப் பொருள் வியாபாரங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும், அவுஸ்திரேலியப் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு