வவுனியாவில் கொட்டும் மழைக்கு மத்தியில் மனித சங்கிலிப் போராட்டம்


IMG_3457வவுனியாவில் கொட்டும் மழைக்கு மத்தியில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலி போராட்டம் இன்று (02.11.2017) மதியம் 2.30மணியளவில் வவுனியா வைத்தியசாலை முன்பாக அமைந்தள்ள சுற்று வட்டத்திலிருந்து மாவட்ட செயலக பிரதான வாசல் வரை இடம்பெற்றது.

அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்யுமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்குமாறும், அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையினை நிறைவேற்றக்கோரியும் இச் மனித சங்கிலி போராட்டம் இடம்பெற்றது.

அடை மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த படி பெண்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், வைத்தியர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு