வடக்கில் ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்


i3வடக்கு மாகாணத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துஷ;பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், சிறுவர் துஷ்பிரயோகங்கள் யாழ் மாவட்டத்திலேயே அதிகமாக உள்ளதாகவும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தப் புள்ளி விபரத்தில், பாலியல் துஷ;பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 30 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 9 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 17 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 24 சிறுவர்களுமாக மொத்தம் 87 சிறுவர்கள் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் துஷ;பிரயோகத்துக்கு முயற்சி மேற்கொண்டதில் யாழ் மாவட்டத்தில் 7 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 6 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 5 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 சிறுவர்களுமாக மொத்தம் 32 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு