இடைக்கால அரசியலமைப்பில் மலையக மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு கிட்ட வேண்டும்


மலையக மக்களின் வரலாற்றில் 1948 ஆம் ஆண்டே அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முதல் ஆரம்ப ஆண்டாக இருந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அன்று மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதன் காரணமாக மலையக மக்கள் தங்கள் அரசியல் உரிமையை இழக்க தொடங்கினார்கள்

தொடர்ந்து சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தினால் 08 இலட்சம் பேர் நாட்டையே விட்டு இந்தியாவிற்கு இடம்பெயரநேர்ந்தது.

அன்று ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினைகள் தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதனை நிவர்த்தி செய்ய தற்போது கொண்டுவரப்பட இருக்கும் புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்ததில் தீர்வுகள் கிட்ட வேண்டும் என பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆரசியல் அமைப்பு சபையில் நேற்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு