ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையப் போவதில்லை – துமிந்த


Duminda_mini-720x480எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது என்று ஶ்ரீலங்கைா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையெ இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேருவளையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடவுள்ளதாக இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு