கல்வியால் மாத்திரமே நாடு முன்னோக்கிச் செல்லும் – அகிலவிராஜ் காரியவசம்


2064905082akila-viraj-kariyawasam_Lஇனபேதம், குலபேதம் மற்றும் மதவாதத்தை இல்லாதொழித்து நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடிவது, கல்வியின் ஊடாக மாத்திரமே என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இதனைக் கூறினார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் தேசிய ஒற்றுமையின்மை காரணமாக நாம் பின்னோக்கிச் சென்றுள்ளதாக கூறிய அமைச்சர் தற்போது புதிய பாதையில் பயணிக்கும் வாய்ப்பு கிட்டியிருப்பதாக கூறினார்.

அத்துடன், அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் இன வாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு