உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி ?


Tamil-arachu-kadchiஜனவரியில் நடை பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் வடகிழக்கில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் விரும்பினால் தமிழரசுக் கட்சியால் ஒதுக்கித்தரப்படும் இடங்களில் போட்டியிட முடியும் என்றும் அன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சில ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின்போதே இத் தகவல்கள் பகிரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

உள்ளுராட்சி சபை தேர்தலில் தனது விருப்பப்படியான பட்டியல் படியே வேட்பாளர்கள் களமிறக்கப்படுவரென தெரிவித்துள்ள சுமந்திரன் அதற்கு உடன்படாத கட்சிகள் வெளியேறலாமென தெரிவித்துள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் பங்காளிக்கட்சிகளிற்கு இடமில்லையென சுமந்திரன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மன்னாரினில் இரண்டு உள்ளுராட்சி சபைகளை டெலோவிற்கு தரமுடியுமென தெரிவித்துள்ள நிலையினில் செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாணத்திலும் ஒரு உள்ளுராட்சி சபையினை கோரியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதனிடையே புளொட் சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தினில் சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பிரதேசசபைகளினை தனக்கு கட்டாயம் தரவேண்டுமென கோரியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே ஈபிஆர்எல்எவ் தனித்து போட்டியிடும் முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு