கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர்


thomas_shannon-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்குப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வோசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நவம்பர் 5ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கான பயணத்தை, தோமஸ் சானொன் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை பங்களாதேஷ் செல்லும் அவர், நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார். இவர் அமெரிக்க – இலங்கை பங்காளி கலந்துரையாடலில் பங்கேற்பதுடன் அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு